மீண்டும் அணிக்கு திரும்பும் யுவ்ராஜ் சிங் ? வெற்றிடத்தை நிரப்ப பிசிசிஐ தீவிரம்


யுவராஜ் சிங் இந்தியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இவர் இறுதியாக இந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடருக்கு பின்பு அணியில் இடம்பிடிக்கவில்லை.

yuvaraj singeyes the no 4 spot in the team india

இதற்கு மிக முக்கியமான காரணம் இந்தியா அணியில் இடம் பிடிக்க பிச்சி யோயோ என்னும் உடற்தகுதி தேர்வினை வீரர்களுக்கு கட்டாயம் ஆக்கியது தான்.

யுவராஜ் சிங் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பலமுறை யோயோ தேர்விற்கு சென்றும் தோல்வியினை மட்டுமே தழுவினார்.

அவர் தற்போது மீண்டும் அணியில் இடம் பிடிப்பதற்கு அவர் கட்டாயம் யோயோ தேர்வில் தெறிச்சி பெற்றேனா ஆகா வேண்டிய நிலையில் உள்ளார்.

 

பிசிசிஐ தேர்வு குழுவினர் யுவராஜ் சிங்கை மீண்டும் யோயோ தேர்விற்கு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அளித்துள்ளது.

இந்தியா அணி வெகு நாட்களாக நான்காவது இடத்தில ஆடுவதற்கு நிலையான வீரரை தேடி வருகின்றது மீண்டும் யுவராஜ் சிங்கை அந்த இடத்தில ஆட வைப்பதற்கு முனைப்பு காட்டி வருகின்றது.

yuvaraj singeyes the no 4 spot in the team india

தற்போது யுவராஜ் சிங்க் அணியில் இடம் பெறுவதற்கு யோயோ என்னும் உடற் தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றால் போதும். அதற்காக யுவராஜ் சிங் தீவிர பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றார்.

அணியில் நான்காவது இடம்:

இந்தியா அணியில் நான்காவது இடத்தில ஆடுவதற்கான பேட்ஸ்மேனை இந்தியா அணி ரொம்ப நாட்களாக தேடி வருகின்றது.

2015 உலகக்கோப்பையில் இருந்து யுவராஜ் சிங் நான்காவது இடத்தில ஆடி வருகின்றார் மேலும் 10 போட்டிகளில் 358 ரன்களையும் 44.75 சராசரியை அடித்துள்ளார். அதில் இங்கிலாந்துடன் மட்டும் தனியாக 150 ரன்களை அடித்துள்ளார்.

 

யுவராஜை தவிர அந்த இடத்தில தோனி 300க்கு மேல் நான்காவது இடத்தில ரன்களை அடித்துள்ளார் வேறு எந்த வீரர்களும் அந்த இடத்தில சரியாக ஆடவில்லை.

பிசிசிஐ இதுவரை அதிகமான வீரர்களை அந்த இடத்தில சோதித்து பார்த்துவிட்டது யாரும் சரியாக செயல்படவில்லை குறிப்பாக கெதர் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், ராகுல், ரஹானே போன்ற வீரர்களையும் அந்த இடத்தில சோதித்து விட்டது.

yuvaraj singeyes the no 4 spot in the team india

இருப்பினும் சரியான வீரரை இதுவரை நான்காவது இடத்தில ஆடுவதற்கு இந்தியா அணி தேர்வு செய்யவில்லை ஆகையால் மீண்டும் யுவராஜிற்கு அந்த கதவு திறந்துள்ளது.

யுவராஜ் சிங் 36 வயது தொடங்க உள்ளது ஆகையால் அவர் இந்த வாய்ப்பினை தவறவிட மாட்டார். ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்காக தற்போது விளையாடிய வரும் அவர் ஒரு போட்டியில் 20 ரன்களும் ஒரு போட்டியில் 42 ரன்களும் அடித்துள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format