புத்தக வெளியீட்டு விழாவில் தமிழில் பேசி அசத்திய சச்சின் வீடியோ.


கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தமிழில் பேசி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

watch sachin speaking in tamil

மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் புத்தக வெளியீட்டு விழாவில் சச்சின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா கிரிக்கெட் அணி, விராட் கோலி பற்றி மற்றும் தனது கிரிக்கெட் பயணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் அதிகம் பகிர்ந்து கொண்டார் .

அப்போது அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி போட்டியில் தான் மும்பை அணிக்காக விளையாடிய போது மொழி பிரச்னை அதிகமாக இருந்தது என கூறினார்.

watch sachin speaking in tamil

அதிலும் குறிப்பாக தமிழக அணியுடன் விளையாடும் நேரத்தில் எல்லாம் அவர்கள் பேசும் மொழியினை புரிந்துகொள்ள முடியாமல் தவித்ததாக கூறியுள்ளார்.

சென்னை அணியுடன் ஆடும் சமயங்களில் பந்து வீச்சாளர்கள் ரிவேர்ஸ் பௌலிங் செய்யும் நேரங்களில் அதை சமாளித்து ஆடுவதற்காக கிரீஸை விட சற்று முன் வந்து ஆடியதாக கூறினார்.

ஆனால் அப்படி நான் ஆடும் சமயங்களில் எல்லாம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமான் பதானி முன்னாடி பின்னாடி என்று கூறுவார்.

watch sachin speaking in tamil

இந்த முன்னாடி பின்னாடி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் தான் பல நாட்கள் குழம்பி தவித்ததாக சச்சின் கூறியுள்ளார்.

அவர் பேசிய அந்த முன்னாடி பின்னாடி என்று கூறிய வார்த்தை உச்சரிப்பு அழகாக இருந்ததால் அரங்கத்தில் அனைவரும் கை தட்டி ரசித்தனர்.

அந்த அழகிய நிகழ்வின் விடீயோவினை ஹேமான் பதானி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி சச்சினிடம் தமிழ் பேசி குழப்ப முடியுமா?? என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Loading...
Choose A Format
Gif
GIF format