ஐசிசி-யிடம் இந்தியா மீது புகார் அளித்த இலங்கை அணி.


இந்தியா கிரிக்கெட் போர்டுக்கு எதிராக டெல்லி கற்று மாசு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை கிரிக்கெட் போர்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளது.

sri lanka cricket board complains to icc on air pollution during delhi test vs india

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமீபத்தில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. மூன்றாவது போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இருந்து காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் அவதி பட்டனர்.

sri lanka cricket board complains to icc on air pollution during delhi test vs india

கற்று மாசு காரணமாக எங்களால் விளையாட முடியவில்லை என்று போட்டி நடுவரிடம் இலங்கை அணி வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது இந்தியா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோவத்தினை ஏற்படுத்தியது இதன் காரணமாக இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி தனது முச்சத்தினை இழந்தார்.

sri lanka cricket board complains to icc on air pollution during delhi test vs india

அத்துடன் இலங்கை வீரர்கள் தொடர்ந்து இதுபோல் போட்டியின் நடுவில் இடைஞ்சல் செய்து வந்ததால் ஒருகட்டத்தில் இந்தியா அணியின் கேப்டன் இந்தியா பேட்ஸ்மேன்களை திரும்பி வரச்சொல்லி ஆட்டத்தை டிக்கலர் செய்தார்.

அதன் பின் இலங்கை வீரர்கள் பேட்டிங் ஆட களத்திற்குள் சென்றனர். மேலும் நான்காவது நாள் ஆட்டத்தின் போதும் இதே போல் மூச்சி திணறல் ஏற்படுவதாக இலங்கை வீரர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அதில் டிக்வெல்லா, டி சில்வா மற்றும் சண்டகண் ஆகியோருக்கு நாடித்துடிப்பு மற்றும் சுவாச காற்று அளவினை பரிசோதித்தனர்.

sri lanka cricket board complains to icc on air pollution during delhi test vs india

இதில் இவர்கள் மூவருக்கும் 99.98 மற்றும் 99 என்ற அளவுகளில் சுவாச கற்று இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

அதன்பிறகு இலங்கை வீரர்கள் மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்கள் மேலும் நேற்றைய போட்டியின் பொது வாந்தி எடுத்ததாக கூறப்பட்ட லக்மலும் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுடன் ஒருநாள் போட்டியில் பங்குபெற கொழும்புவில் இருந்து கிளம்பிய 10 இலங்கை வீரர்களை அந்நாட்டு நிருவாகம் கற்று மாசினை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில் இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகரா இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐசிசி) புகார் அளித்துள்ளார்.

sri lanka cricket board complains to icc on air pollution during delhi test vs india

அவர் அளித்த புகாரில் எங்களால் இதுபோன்று விளையாட முடியாது ஏற்கனவே நான்கு வீரர்கள் வாந்தி எடுத்து உடல்நலம் குன்றி உள்ளனர் ஆகையால் ஐசிசி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format