தோனியை ஓய்வு பெற சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த சேவாக் மற்றும் கவாஸ்கர்.


இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது  போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையினை தன்வச படுத்தியது.

shewag and gavaskar counters vvs laxman and ajit agarkar views on ms dhonis future in t20i

மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது அதை தொடர்ந்து இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் வைத்து நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியினை தழுவியது, முதலில் களம் இறங்கிய நியூஸிலாந்து அணி வீரர்கள் 196 ரன்கள் எடுத்தனர்.

அதன் பின் களம் இறங்கிய இந்தியா அணி 11 ரங்களுக்கு எல்லாம் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டினை பறிகொடுத்தது.

 

அதன் பின் கோலி மற்றும் தோனி கை கோர்த்து ஆடி வந்தனர் இதில் தோனி தொடக்கத்தில் சற்று பொறுமையாக ஆடி வந்தார் அவர் முதல் 20 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

ஆனால் அடுத்து ஆடிய 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்தார் மொத்தம் 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார் இறுதியில் இந்தியா அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்து.

shewag and gavaskar counters vvs laxman and ajit agarkar views on ms dhonis future in t20i

முதல் 20 பந்துகள் தோனி ஸ்லோவாக ஆடியதை அடுத்து இந்தியா அணியின் முன்னால் வீரர்கள் அஜித் அகார்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமண் தோனிக்கு பதில் இந்தியா அணியில் இளம் வீரரை எடுக்க வேண்டும்.

தோனி டீ20 போட்டியில் ஓய்வு பெற்று இளம் வீரருக்கு வழிவிட வேண்டும் என கூறி இருந்தனர் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உண்டாகியது.

இதை தொடர்ந்து இந்தியா அணியின் முன்னாள் வீரர்கள் சேவாக் மற்றும் கவாஸ்கர் இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கூறியுள்ளனர்.

 

சேவாக் கூறுகையில் டீ20 போட்டியிலும் தோனியின் பங்களிப்பு நிச்சயம் தேவை தான் சரியான நேரத்தில் அவரே ஓய்வு பெறுவார் எந்த ஒரு இளம் வீரரின் இடத்தையும் அவர் எடுத்துக்கொள்ள மாட்டார்.

டீ20 போட்டிகளில் டோனி நான்காவது வீரராக களம் இறங்க வேண்டும் அவர் செட்டில் ஆவதற்கு சிறிது நேரம் எடுத்துகொள்ளவார் அதன் பின் மைதானத்தில் அவர் தான் ராஜா.

இரண்டாவது போட்டியில் கோலி நன்றாக அடித்து ஆடிக்கொண்டு இருந்த நேரத்தில் டோனி அவருக்கு ஒத்துழைத்து ஆடினார் அந்த நேரத்தில் அதுதான் சரியான அணுகுமுறை என சேவாக் கூறியுள்ளார்.

shewag and gavaskar counters vvs laxman and ajit agarkar views on ms dhonis future in t20i

மேலும் இதுகுறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில் அஜித் அகர்கர் மற்றும் லட்சுமணக்கு கருது கூற முழு உரிமை உண்டு அது அவர்களின் பார்வை தேர்வர்களின் பார்வையல்ல.

மேலும் ஹர்திக் பாண்டியா இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் அளவிற்கு இன்னும் பயிற்சி ஆகவில்லை. அவர் மீதுள்ள எதிர்பார்ப்பு அவரை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

ஒருவர் அதிகப்படியான ரன்களை குவிக்காவிட்டாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பதன் மூலம் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவிகரமாக இருக்கும்.

 

இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க கூடாது ஒரு வீரர் 30 வயதினை கடக்கும் போது யாராக இருந்தாலும் அவரது ஆட்டத்தில் தேடி தேடி தப்பினை கண்டுபிடிப்பார்கள் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format