நாங்கள் அடையாளம் காட்டிய இடத்தில் மீனவர்களை தேடவில்லை, மீனவர் வாட்ஸ் ஆப் பதிவு.


ஒக்கி புயலில் கடலில் மாயமான கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்களை தேடும் பணியில் அலட்சியம் காட்டப்படுவதாக, தேடும் பணியில் மீட்பு குழுவினருடன் சென்றுள்ள மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒக்கி புயல் தாக்கியது இதில் கன்னியாகுமாரி மாவட்டம் பலத்த சேதம் அடைந்தது.

பொதுமக்களின் இயல்பு வாழக்கை முடங்கியதோடு கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகினர். இவர்களை தேடும் பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டாமல் வருகின்றது.

rescue team didnt care about fisherman whatsapp audio

2000கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றதில் இன்னும் 1000கும் மேற்பட்ட மீனவர்கள் நிலை என்ன ஆகியது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் மீனவர்களை தேடும் பணியில் அலட்சியம் காட்டப்படுவதாக, தேடும் பணியில் மீட்பு குழுவினருடன் சென்றுள்ள மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மீட்பு குழுவுடன் மீனவர்களை தேடுவதற்காக சென்ற மீனவர் டிக்சன் என்பவர் வாட்ஸ் ஆப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

rescue team didnt care about fisherman whatsapp audio

அதில் அவர் நாங்கள் கூறும் இடத்தில மீனவர்களை தேடாமல் வேறு இடத்தில பெயரளவில் தேடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மீனவர்களை தேடுவதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் குடுக்கும் அளவில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.

மீனவர்கள் கடலில் மாயமாகி ஒருவாரம் ஆகிய நிலையில் இன்னும் மீனவர்களை மீட்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் மீனவர்கள் பற்றிய சரியான தகவல்களை வெளியிடாமல் உள்ளது.

rescue team didnt care about fisherman whatsapp audio

மற்றும் தமிழக அரசு மீனவர்களை மீட்டெடுப்பதில் முனைப்பு காட்டாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், இளைஞர்கள் ,பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் எங்களை வந்து சந்திக்கவில்லை என்றல் நேரே கேரளா முதலமைச்சர் பினராய் விஜயனை சென்று எங்கள் கோரிக்கையை வைப்போம் என கூறியுள்ளார்.

மீனவர் வெளியிட்ட வாட்ஸ் ஆப் பதிவு:

Loading...
Choose A Format
Gif
GIF format