2019 உலகக்கோப்பை வரை விளையாடுவேன் யுவராஜ் சிங் அதிரடி.


இந்தியா அணியின் நட்சத்திர நாயகனாக திகழ்ந்து வந்தவர் யுவராஜ் சிங் 36 வயதாக இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் இவர் இந்தியா அணியில் இடம் பிடிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றார்.

reason why yuvaraj singh not get selected says msk prasad

தனது 19 வயதில் இந்தியா கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடி வருகின்றார். 2000ஆம் வருடம் அணியில் சேர்ந்த இவர் இதுவரை 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டீ20 போட்டிகள் இந்தியா அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்தியா அணி தோனி தலைமையின் கீழ் வாங்கிய 2007 டீ20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை போட்டிகளில் யுவராஜின் பங்கு மிக முக்கியமானது.

தற்போது பிசிசிஐ இந்தியா அணியில் இடம் பிடிப்பதற்கு யோயோ என்னும் உடற்தகுதி தேர்வினை கட்டாயம் ஆக்கியது.

reason why yuvaraj singh not get selected says msk prasad

அதில் இருந்து யுவராஜ் சிங் அணியில் இடம் பிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார் முதல் மூன்று முறை யோயோ தேர்வில் தோல்வியை தழுவினார் யுவராஜ் சிங்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற யோயோ தேர்வில் யுவராஜ் சிங் 16.3 புள்ளிகள் எடுத்து யோயோ தேர்வில் தேர்வாகினார்.

இதனால் நேற்று அறிவிக்கப்பட்ட இலங்கை உடனான டீ20 தொடரில் யுவராஜ் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் மீண்டும் அவர் அணியில் இடம் பிடிக்கவில்லை.

reason why yuvaraj singh not get selected says msk prasad

மேலும் இந்தியா அணியின் தேர்வு குழுவின் தலைவர் பிரசாத் இந்தியா அணியில் என் யுவராஜ் இடம்பிடிக்கவில்லை என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் யுவராஜ் சிங் உடற்தகுதியில் தான் பிரச்னை இருந்தது தற்போது அவர் உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

ஆனால் அவர் தற்போது உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை போட்டிகளில் சற்று ரன்கள் அடிக்க வேண்டும் அதன்பின் அவரின் தற்போதைய ஆட்ட திறமையை கொண்டு அவர் அணிக்கு பரிந்துரைக்கப்படுவார் என கூறியுள்ளார்.

reason why yuvaraj singh not get selected says msk prasad

யோயோ தேர்வில் தேர்ச்சி அடைந்ததை அடுத்து கருத்து கூறியுள்ள யுவராஜ் நான் 2019 வரை கிரிக்கெட் விளையாடுவேன் என உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் நான் தோல்வி அடைந்துகொண்டு இருக்கிறேன் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். தற்போதும் அணியில் இடம் கிடைக்காமல் தோல்வி தான்.

கடந்த மூன்று முறையாக யோயோ தேர்வில் நான் தோல்வியை தான் தழுவி வந்தேன் ஆனால் தற்போது அதில் தேர்ச்சி அடைந்துள்ளேன்.

reason why yuvaraj singh not get selected says msk prasad

17 வருடங்களுக்கு பிறகு தோல்வி அடைந்துகொண்டு இருக்கின்றேன் இதனால் நான் கவலைப்படவில்லை. நான் ஏற்கனவே ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளேன்.

ஒருவர் வெற்றி பெற்ற மனிதனாக மாறவேண்டும் என்றால் அவரின் வாழ்க்கையில் தோல்வி கட்டாயம் தேவை தோற்கடிக்கப்பட வேண்டும்.

அந்த தோல்வி அவரை வலுவான நபராக மாற்றும் அவரை அடுத்த இலக்கினை நோக்கி முன்னேற வைக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என கூறியுள்ளார்.

reason why yuvaraj singh not get selected says msk prasad

நான் இன்னும் விளையாடிக்கொண்டு இருக்கின்றேன், எந்த வகையான கிரிக்கெட்டினை நோக்கி நான் செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை.

ஆனால் எனக்கு வயதாகி விட்டதால் முன்பை விட கடுமையாக உழைக்கிறேன் நான் 2019 வரை விளையாடுவேன் அதன் பின் எனது முடிவினை நான் அறிவிப்பேன்.

எத்தனைபேர் இதை நம்புவார்கள் என எனக்கு தெரியவில்லை ஆனால் நான் அதை நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format