புதுச்சேரி மாநிலத்துக்கு புதிதாக கிரிக்கெட் அணி உருவாக்க அனுமதி.


இந்தியா கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யில் இணை உறுப்பினராக புதுச்சேரி கிரிக்கெட் வாரியம் விண்ணப்பித்திருந்தது.

puducherry granted bcci associate membership status

இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் கமிட்டி ஒன்றை உருவாக்கியது.

அதை தொடர்ந்து இந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கலந்தாய்வில் இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி கிரிக்கெட் வாரியத்தை இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் இணை உறுப்பினராக சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

puducherry granted bcci associate membership status

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டி உறுப்பினர் கூறுகையில் புதுச்சேரி மாநிலம் இணை உறுப்பினராக சேருவதற்கு அளித்த விண்ணப்பம் சரியானதுதான் என கூறியுள்ளார்.

புதுச்சேரி கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐ சேர்க்காமல் இருப்பதற்கு எந்த ஒரு சரியான காரணமும் இல்லை.

ஆகையால் புதுச்சேரி கிரிக்கெட் வாரியத்தை புதிய முழு வாரியமாக பிசிசிஐயுடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்த வருடம் புதுச்சேரி அணியும் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும்.

puducherry granted bcci associate membership status

மேலும் புதிய தமிழ் வீரர்கள் இந்தியா அணிக்குள் செல்வதற்கு இது வலுவாக அமையும் ஏனெனில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் மிக பெரிய அரசியல் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

அதை பார்க்கையில் நிச்சியமாக புதுச்சேரி கிரிக்கெட் வாரியம் மூலமாக இன்னும் திறமை வாய்ந்த தமிழ் வீரர்கள் இந்தியா அணியில் நுழைய முடியும்.

மேலும் யூனியன் பிரதேஷத்தில் சர்வதேச போட்டிகளும் இனி நடத்தப்படும் இது புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாட்டினை அதிகம் ஊக்குவிக்கும் என புதுச்சேரி கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

எது எப்படியோ இனி இந்தியா கிரிக்கெட் வாரியத்தில் இரண்டு தமிழ் அணிகள் விளையாடும்.

Loading...
Choose A Format
Gif
GIF format