தல தோனி சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் தக்க வைப்பதில் சிக்கல் நீடிக்கின்றது.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பழைய வீரர்களை தக்க வைப்பதில் சிக்கல் நீடிக்கின்றது.

ipl player retention battle rages on as franchises unable to reach consensus

இந்தியாவின் உள்ளூர் டீ20 லீக் ஆட்டமான ஐபில் வருடாவருடம் நடந்து வருகின்றது இதில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து குஜராத் லயன்ஸ் மற்றும் புனே அணிகள் புதிதாக இணைக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் தடை நீங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் அடுத்த வருடம் விளையாட உள்ளது.

ipl player retention battle rages on as franchises unable to reach consensus

இதற்காக இரண்டு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களம் இறங்குவதில் சிக்கல் உள்ளதாக பிசிசிஐ நிருவாகம் தெரிவித்துள்ளது.

மேலும் 2018 ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்த சிக்கல்களை சரிசெய்யுமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிருவாகத்திற்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ipl player retention battle rages on as franchises unable to reach consensus

ஐபில் போட்டியில் வருகின்ற சீனில் ஒவ்வொரு அணி நிருவாகமும் தங்களது மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று புதிய விதிமுறையை கொண்டு வந்தது.

இதற்கு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் சம்மதம் தெரிவித்த நிலையில் மற்ற அணி நிருவாகிகள் இதற்கு ஒப்புதல் அழிக்க மறுத்து வருகின்றனர் இதனால் சென்னை அணியில் தோனியை தக்க வைப்பதில் சிக்கல் நீடிக்கின்றது.

ipl player retention battle rages on as franchises unable to reach consensus

மற்ற ஐபில் அணிகளின் உரிமையாளர்கள் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் தங்கள் அணி வீரர்களை தக்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் கூறும் கருத்து படி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தற்போது எந்த வீரர்களும் இல்லை அவர்கள் புதிய வீரர்களை ஐபில் ஏலத்தில் தான் எடுக்க முடியும் என கூறி வருகின்றனர்.

ipl player retention battle rages on as franchises unable to reach consensus

இதனால் ஐபில் நிருவாகம் மூன்று வீரர்களை தக்க வைப்பது குறித்த முடிவினை எடுப்பதில் சிக்கல் நிலவி வருகின்றது.

இந்நிலையில் நாளை ஐபில் தொடருக்கான காவெர்னிங் கவுன்சில் கூட்டம் கூடுவதால் இதற்கான தீர்வு காணப்படும் என தெரியவருகின்றது.

Loading...
Choose A Format
Gif
GIF format