தல தோனி, சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு திரும்ப அனுமதி.


சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது பழைய வீரர்கள் 5து பேரை தங்கள் அணிகளில் தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ கவர்னிங் கவுண்சில் அனுமதி அளித்துள்ளது.

ipl governing council clears path for dhonis return to csk

அத்துடன் மீதம் உள்ள வீரர்களை ஐபில் ஏலத்தில் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது இதை தொடர்ந்து சென்னை அணிக்கு மீண்டும் தல தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் உள்ளூர் டீ20 லீக் போட்டியான ஐபில் போட்டிகள் வருடாவருடம் நடந்து வருகின்றது. இதில் கடந்த 2015ஆம் வருடம் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

ipl governing council clears path for dhonis return to csk

தற்போது தடைகள் நீங்கி 2018ஆம் ஆண்டு மீண்டும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐபில் போட்டிகளில் விளையாட தீவிரம் காட்டி வருகின்றது.

இந்நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் களம் இறங்க சிக்கல்களை சரி செய்து பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

ipl governing council clears path for dhonis return to csk

இந்நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களது பழைய வீரர்களை தக்க வைத்துக்கொள்ள சிக்கல் நீடித்து வந்தது. தற்போது கூடிய ஐபில் தொடருக்கான கவர்னிங் கவுண்சில் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் கிடைத்துள்ளது.

 

இந்த கூத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐபில் போட்டியில் மீண்டும் காலம் இறங்க அனுமதி அளித்ததோடு தங்களது பழைய வீரர்கள் 5து பேரை தக்க வைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ipl governing council clears path for dhonis return to csk

மற்ற வீரர்களை குஜராத் லயன்ஸ் ரைசிங் புனே அணிகளில் இருந்து ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் ஐபில் போட்டியில் களம் இறங்குவதால் குஜராத் மற்றும் புனே அணிகள் தானாகவே தகுதி நீக்கம் அடையும்.

 

இந்த அனுமதியினை தொடர்ந்து சென்னை அணி தல தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பிராவோ மற்றும் மெக்கல்லம் ஆகிய 5து வீரர்களை தங்கள் அணியில் தக்க வைக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

ipl governing council clears path for dhonis return to csk

அதே போல் ராஜஸ்தான் அணி ரஹானே, ஸ்மித், பால்க்னெர் ஆகியோரை தங்கள் அணியில் தக்க வைக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

Loading...
Choose A Format
Gif
GIF format