ஆஸி. இங்கிலாந்து உலக சாதனையை சமன் செய்த இந்தியா அணி.


இந்தியா வந்துள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சாதனையை சமன் செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது அதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது மேலும் இன்று நடந்து முடிந்த மூன்றாவது போட்டியும் சமனில் முடிந்தது.

இதையடுத்து இந்தியா அணி இளங்கியுடனான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் இந்தியா அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9தாவது டெஸ்ட் தொடர் இதுவாகும் இதன்மூலம் இந்தியா அணி சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

இதுவரை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக 9து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது அதை தொடர்ந்து தற்போது இந்தியா அணியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இங்கிலாந்து அணி 1984 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற அணைத்து டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றி இருந்தது.

அதன் பின் ஆஸ்திரேலியா அணி 2005 முதல் 2008 வரை உள்ள காலகட்டத்தில் நடைபெற்ற அணைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 9 தொடரினை கைப்பற்றி இலங்கையுடன் முதல் இடத்தை பகிர்ந்து.

தற்போது கோலி தலைமையிலான இந்தியா அணி 2015 முதல் 2017 வரை நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்று இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

அடுத்து தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ள இந்தியா அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது அந்த தொடரையும் கைப்பற்றும் எனில் இந்த சாதனை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடிக்கும்.

Loading...
Choose A Format
Gif
GIF format