தோனியை ஓய்வு பெற சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த புவனேஸ்வர் குமார்.


இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாடி வருகின்றது.

bhuvneshwar kumar supports ms dhoni

இதில் முதல் போட்டியில் இந்தியா விளையாடி வந்த நிலையில் இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 196 ரன்கள் அடித்தது.

அந்த ரன்னை சேஸ் செய்த இந்தியா அணி 11 ரங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அதன் பின் தோனியும் கோலியும் ஒருவழியாக நிலைத்து ஆடி வந்தனர் ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே இந்தியா அணி எடுத்து இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி தோல்வி தழுவியது.

bhuvneshwar kumar supports ms dhoni

தோனி களம் இறங்கிய உடன் சற்று பொறுமையாக தான் ஆடி வந்தார் முதல் 20 பந்துகளுக்கு 17 ரன்கள் மட்டுமே நடித்திருந்தார் அதன் பின் அவர் 37 பந்துகளில் 49 ரன்களை அடித்தார்.

இந்நிலையில் இதை காரணம் காட்டி முன்னாள் வீரர்கள் அஜித் அகார்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் தோனிக்கு பதிலாக வேற இளம் வீரரை இந்தியா அணியில் சேர்க்கவேண்டும் என கூறினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் தோனியின் முந்தைய ரெகார்டுகளை எடுத்து பாருங்கள் அதில் எந்த பிரச்னையும் இல்லை, அணியின் நிருவாகத்திற்கும் எந்த பிரச்னையும் இல்லை.

bhuvneshwar kumar supports ms dhoni

அவர் தற்போது அணிக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாரோ அது நன்றாக தான் போய்க்கொண்டு இருக்கின்றது அவரு ஒரு லெஜெண்ட் அவருக்கு நன்றாக தெரியும் இந்தியா அணிக்கு என்ன செய்யவேண்டும் என்பது என கூறியுள்ளார்.

கடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா அணி 5து பந்து வீச்சாளர்களை கொண்டு களம் இறங்கியது இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்றது ஆனால் இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியது.

இதனால் 5து பந்து வீச்சாளர்கள் கொண்டு இந்தியா அணி களம் இறங்க வேண்டுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. அதற்கு பதிலளித்த புவி இந்தியா அணி கண்டிப்பாக 5து வீரர்களை கொண்டு களம் இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

bhuvneshwar kumar supports ms dhoni

அவர் கூறுகையில் இந்தியா அணி தோல்வி அடைந்ததற்கு பந்து வீச்சாளர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள் எதிரணி சிறப்பாக ஆடியது.

ஹர்திக் பாண்டிய மற்றும் சில பந்து வீச்சாளர்களை நாம் பகுதி நேர பந்துவீச்சாளர்களாக கருதுவதால் கண்டிப்பாக நாம் 5தாவது பந்து வீச்சாளர் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியமான பந்து வீச்சாளர் அதிக ரன் கொடுத்து விட்டால் அவரை நீக்கிவிட்டால் அணியின் காம்பினேஷன் குறித்து சற்று சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format