இலங்கை உடனான டீ20 மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்தியா அணி அறிவிப்பு.


இந்தியா அணி தற்போது இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

bcci announced indian team squad for srilankan t20 series and south africa test series

அதன் பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாட உள்ளது.

ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணி கடந்த நவம்பர் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது அதில் ரோஹித் சர்மா இந்தியா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் டீ20 போட்டியில் முக்கிய வீரர்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

bcci announced indian team squad for srilankan t20 series and south africa test series

இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கு இந்தியா அணியை அறிவித்ததை அடுத்து தற்போது டீ20 போட்டிக்கான இந்தியா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டீ20 அணியில் இருந்து தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

bcci announced indian team squad for srilankan t20 series and south africa test series

இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, பசில் தம்பி, ஜெயதேவ் உன்கடட் ஆகியோருக்கு டீ20 அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் சிங் யோயோ தேர்வில் தேர்ச்சி அடைந்த நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படுவார் என நினைக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படவில்லை.

டீ20 தொடருக்கான இந்தியா அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டிய, வாஷிங்டன் சுந்தர்,யுஸ்வண்டெர் சஹால், பும்ராஹ், முகமத் சிராஜ், தீபக் ஹூடா, பசில் தம்பி, ஜெயதேவ் உன்கடட்.

இலங்கை உடனான தொடர் முடிந்த பின்பு இந்தியா அணி தென் அப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாட உள்ளது.

bcci announced indian team squad for srilankan t20 series and south africa test series

இதற்காக தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடருக்கு தற்போது இந்தியா அணியினை அறிவித்துள்ளது.

இதில் புதிதாக பார்திவ் படேல் மட்டும் விஜய் ஷங்கருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்தியா அணி:

விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, வ்ரிடதிமன் சஹா, அஸ்வின், ஜடேஜா, பார்திவ் படேல், ஹர்திக் பாண்டிய, புவநேவார் குமார், முகமத் ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ராஹ்.

Loading...
Choose A Format
Gif
GIF format