ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை கோலி முறியடிப்பாரா??


இந்தியா வந்துள்ள இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி 600க்கு மேல் ரன்களை அடித்துள்ளார் மேலும் கோழி ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை வேகமாக நெருங்கி வருகிறார்.

batsmen scoring 600 runs in a series most time

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது நவம்பர் 11ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடரில் முதல் போட்டி சாமானில் முடிவடைந்தது.

batsmen scoring 600 runs in a series most time

அதை தொடர்ந்து நாகபூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் மூன்றாவது போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் காற்று மாசு காரணமாக போட்டி சமனில் முடிவடைந்தது.

இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டுடன் தொடங்கினார் அதன் பின் இரண்டாவது இன்னிங்சில் 104 ரன்களை அடித்து அசத்தினார்.

batsmen scoring 600 runs in a series most time

அடுத்து இரண்டாவது போட்டியில் கோலி 213 ரன்களை விளாசினார் அதை தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் 243 ரன்களை அடித்தார் மூன்றாவது போட்டி இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்களை அடித்தார்.

இந்த தொடரில் மொத்தம் 5து இன்னிங்ஸ்கள் மட்டும் ஆடிய விராட் கோலி மொத்தம் 610 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்தது இது கோலிக்கு மூன்றாவது முறையாகவும்.

batsmen scoring 600 runs in a series most time

ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அதிக முறை அடித்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம். ஆஸ்திரேலியாவின் நீல் ஹார்விஸ் இதுவரை மூன்று முறை 600 ரன்களுக்கு மேல் ஒரே டெஸ்ட் தொடரில் அடித்துள்ளார்.

வேஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இதுவரை மூன்று முறை 600 ரன்களை கடந்துள்ளார் அவரை தொடர்ந்து கேரி சோபர்ஸும் மூன்று முறை அடித்துள்ளார்.

batsmen scoring 600 runs in a series most time

தற்போது இவர்கள் பட்டியலில் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி தனது மூன்றாவது 600 ரன்களை அடித்து இவர்களை சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேன் இதுவரை 6 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் இவரின் சாதனையை கோலி விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்க படுகின்றது.

Loading...
Choose A Format
Gif
GIF format